ஹதீஸ்கள்
#6718
ஸஹீஹ் அல்-புகாரீ - Expiation for Unfulfilled Oaths
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், “நபி (ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே!” என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், “நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد، عن غيلان بن جرير، عن ابي بردة بن ابي موسى، عن ابي موسى الاشعري، قال اتيت رسول الله صلى الله عليه وسلم في رهط من الاشعريين استحمله فقال " والله لا احملكم، ما عندي ما احملكم ". ثم لبثنا ما شاء الله، فاتي بابل فامر لنا بثلاثة ذود، فلما انطلقنا قال بعضنا لبعض لا يبارك الله لنا، اتينا رسول الله صلى الله عليه وسلم نستحمله فحلف ان لا يحملنا فحملنا. فقال ابو موسى فاتينا النبي صلى الله عليه وسلم فذكرنا ذلك له فقال " ما انا حملتكم بل الله حملكم، اني والله ان شاء الله لا احلف على يمين فارى غيرها خيرا منها، الا كفرت عن يميني، واتيت الذي هو خير وكفرت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Expiation for Unfulfilled Oaths
- Hadith Index
- #6718
- Book Index
- 11
Grades
- -
