ஹதீஸ்கள்
#6713
ஸஹீஹ் அல்-புகாரீ - Expiation for Unfulfilled Oaths
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ரமளான் மாத (ஸதகத்துல் ஃபித்ர்) தர்மத்தை ஆரம்ப(க் கால) ‘முத்’தான நபி (ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கிவந்தார்கள். மேலும், சத்திய (முறிவுக்கான) பரிகாரத்தையும் நபி (ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கிவந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூகுதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களது ‘முத்’தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களது ‘முத்’தைவிட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி (ஸல்) அவர்களது (காலத்தில் இருந்த மதீனா) ‘முத்’தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை” என்று கூறினார்கள். மேலும், அவர்கள் என்னிடம் “ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைவிட (அளவில்) சிறியதொரு ‘முத்’தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை) வழங்குவீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைக் கொண்டே வழங்குவோம்” என்று கூறினேன். அவர்கள் “பார்த்தீர்களா? (இறுதியில்) விஷயம் நபி (ஸல்) அவர்களது ‘முத்’துக்கே வந்து சேர்கிறது” என்றார்கள்.9 அத்தியாயம் :
حدثنا منذر بن الوليد الجارودي، حدثنا ابو قتيبة وهو سلم حدثنا مالك، عن نافع، قال كان ابن عمر يعطي زكاة رمضان بمد النبي صلى الله عليه وسلم المد الاول، وفي كفارة اليمين بمد النبي صلى الله عليه وسلم. قال ابو قتيبة قال لنا مالك مدنا اعظم من مدكم ولا نرى الفضل الا في مد النبي صلى الله عليه وسلم. وقال لي مالك لو جاءكم امير فضرب مدا اصغر من مد النبي صلى الله عليه وسلم باى شىء كنتم تعطون قلت كنا نعطي بمد النبي صلى الله عليه وسلم قال افلا ترى ان الامر انما يعود الى مد النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Expiation for Unfulfilled Oaths
- Hadith Index
- #6713
- Book Index
- 6
Grades
- -
