ஹதீஸ்கள்
#6711
ஸஹீஹ் அல்-புகாரீ - Expiation for Unfulfilled Oaths
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் அழிந்துவிட்டேன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் ரமளானில் (நோன்பு நோற்றுக்கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடிமையை விடுதலை செய்யும் வசதியைப் பெற்றுள்ளீரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம்பழம் உள்ள கூடை ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்துச் சென்று தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர். “என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரமஏழைகள் யாருமில்லை” என்று கூறினார். பிறகு, நபி (ஸல்) அவர்கள் “இதை எடுத்துச் சென்று உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا سفيان، عن الزهري، عن حميد، عن ابي هريرة، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال هلكت. قال " وما شانك ". قال وقعت على امراتي في رمضان. قال " هل تجد ما تعتق رقبة ". قال لا. قال " فهل تستطيع ان تصوم شهرين متتابعين ". قال لا. قال " فهل تستطيع ان تطعم ستين مسكينا ". قال لا اجد. فاتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال " خذ هذا فتصدق به ". فقال اعلى افقر منا ما بين لابتيها افقر منا. ثم قال " خذه فاطعمه اهلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Expiation for Unfulfilled Oaths
- Hadith Index
- #6711
- Book Index
- 4
Grades
- -
