ஹதீஸ்கள்
#6691
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் ‘தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கூற வேண்டும் எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம். எங்கள் இருவரில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது வீட்டில்) தேன் அருந்தினேன். ஆனால், இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். அப்போது, “நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கும் (66:1ஆவது) வசனம் அருளப்பெற்றது. (66:4ஆவது வசனத்தில்) “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...” என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர் களையும் குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) “நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசிய மாகச் சொல்லியிருந்தார்” என்பது, “இல்லை; நான் தேன்தான் அருந்தினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் குறிக்கிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் யூசுஃப் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்ராஹீம் பின் மூசா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “நபி (ஸல்) அவர்கள், இனிமேல் நான் ஒரு போதும் இவ்வாறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். இதை யாரிடமும் தெரிவித்துவிடாதே!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.92 அத்தியாயம் :
حدثنا الحسن بن محمد، حدثنا الحجاج، عن ابن جريج، قال زعم عطاء انه سمع عبيد بن عمير، يقول سمعت عايشة، تزعم ان النبي صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش، ويشرب عندها عسلا، فتواصيت انا وحفصة ان ايتنا دخل عليها النبي صلى الله عليه وسلم فلتقل اني اجد منك ريح مغافير، اكلت مغافير فدخل على احداهما فقالت ذلك له. فقال " لا بل شربت عسلا عند زينب بنت جحش، ولن اعود له ". فنزلت {يا ايها النبي لم تحرم ما احل الله لك}، {ان تتوبا الى الله}، لعايشة وحفصة، {واذ اسر النبي الى بعض ازواجه حديثا} لقوله " بل شربت عسلا ". وقال لي ابراهيم بن موسى عن هشام، " ولن اعود له، وقد حلفت، فلا تخبري بذلك احدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6691
- Book Index
- 68
Grades
- -
