ஹதீஸ்கள்
#6655
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் -ரலி) தம்முடைய மகன் (அல்லது மகள்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், ஆகவே அங்கு வந்துசேர வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும், சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் பின் ஹாரிஸா-ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை பின் கஅப் (ரலி) அவர்களும்’ இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) முகமன் (சலாம்) கூறி அனுப்பியதோடு, “அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியவை. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, பொறுமையைக் கைகொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது. குழந்தையைத் தமது மடியில் படுக்கவைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந் தது. (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்களே)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார்கள்.40 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، اخبرنا عاصم الاحول، سمعت ابا عثمان، يحدث عن اسامة، ان ابنة لرسول الله، صلى الله عليه وسلم ارسلت اليه ومع رسول الله صلى الله عليه وسلم اسامة بن زيد وسعد وابى ان ابني قد احتضر فاشهدنا. فارسل يقرا السلام ويقول " ان لله ما اخذ وما اعطى وكل شىء عنده مسمى فلتصبر وتحتسب ". فارسلت اليه تقسم عليه، فقام وقمنا معه، فلما قعد رفع اليه، فاقعده في حجره ونفس الصبي تقعقع، ففاضت عينا رسول الله صلى الله عليه وسلم فقال سعد ما هذا يا رسول الله قال " هذا رحمة يضعها الله في قلوب من يشاء من عباده، وانما يرحم الله من عباده الرحماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6655
- Book Index
- 34
Grades
- -
