ஹதீஸ்கள்
#6641
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ’ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உனது இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று கூறினார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது” என்று பதிலளித்தார்கள்.24 ‘வீட்டார்கள்’ என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، حدثني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها قالت ان هند بنت عتبة بن ربيعة قالت يا رسول الله ما كان مما على ظهر الارض اهل اخباء او خباء احب الى ان يذلوا من اهل اخبايك او خبايك، شك يحيى ثم ما اصبح اليوم اهل اخباء او خباء احب الى من ان يعزوا من اهل اخبايك او خبايك. قال رسول الله صلى الله عليه وسلم " وايضا والذي نفس محمد بيده ". قالت يا رسول الله ان ابا سفيان رجل مسيك، فهل على حرج ان اطعم من الذي له قال " لا الا بالمعروف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6641
- Book Index
- 20
Grades
- -
