ஹதீஸ்கள்
#6607
ஸஹீஹ் அல்-புகாரீ - Divine Will
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்ட (கைபர்) போரில், எதிரி களுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம் களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்த ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதை அறிய) மக்களில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதிர்த்து எல்லாரையும்விடக் கடுமையாகப் போராடும் அதே நிலையில் இருந்தார். இறுதியில் அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தமது வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து (அழுத்தி)க்கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது. (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நான் உறுதிகூறுகின்றேன்” என்று சொன்னார். அதற்கு நபி ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் “தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரை எவர் பார்க்க விரும்புகின்றாரோ அவர் இவரைப் பார்த்துக்கொள்ளட்டும் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்óம்களுக்காகப் போராடுவதில் மகத்தான (பங்காற்றுப)வராகத் திகழ்ந்தார். (தாங்கள் அவரைப் பற்றி நரகவாசி என்று குறிப்பிட்டிருப்பதால்) அவர் இதே (தியாக) நிலையில் இறக்கப்போவதில்லை என்று நான் அறிந்தேன். அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டபோது அவசரமாக இறந்துவிட விரும்பி தற்கொலை செய்துகொண்டார்” என்று சொன்னார். அப்போதுதான் நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராகிவிடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.16 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا ابو غسان، حدثني ابو حازم، عن سهل، ان رجلا، من اعظم المسلمين غناء عن المسلمين في غزوة غزاها مع النبي صلى الله عليه وسلم فنظر النبي صلى الله عليه وسلم فقال " من احب ان ينظر الى الرجل من اهل النار فلينظر الى هذا ". فاتبعه رجل من القوم، وهو على تلك الحال من اشد الناس على المشركين، حتى جرح فاستعجل الموت، فجعل ذبابة سيفه بين ثدييه حتى خرج من بين كتفيه فاقبل الرجل الى النبي صلى الله عليه وسلم مسرعا فقال اشهد انك رسول الله. فقال " وما ذاك ". قال قلت لفلان " من احب ان ينظر الى رجل من اهل النار فلينظر اليه ". وكان من اعظمنا غناء عن المسلمين، فعرفت انه لا يموت على ذلك فلما جرح استعجل الموت فقتل نفسه. فقال النبي صلى الله عليه وسلم عند ذلك " ان العبد ليعمل عمل اهل النار، وانه من اهل الجنة، ويعمل عمل اهل الجنة، وانه من اهل النار، وانما الاعمال بالخواتيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divine Will
- Hadith Index
- #6607
- Book Index
- 13
Grades
- -
