ஹதீஸ்கள்
#6401
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அஸ்ஸாமு அலைக்க” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “வ அலைக்கும்” (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்தார்கள். உடனே, நான் (வேகப்பட்டவளாக) “அஸ்ஸாமு அலைக்கும், வ லஅனக்கமுல்லாஹு, வ ஃகளிப அலைக்கும்” (உங்களுக்கு மரணம் நேரட்டும். இறைவனின் சாபம் உங்களுக்கு ஏற்படட்டும். உங்கள்மீது அவனது கோபம் உண்டாகட்டும்) என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! நளினத்தைக் கடைப்பிடிப்பாயாக! ‘வன்மையாக நடந்துகொள்வதிலிருந்து’ அல்லது ‘அருவருப்பாகப் பேசுவதிலிருந்து’ உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நான் (பதில்) சொன்னதை நீ செவியுறவில்லையா?” என்று (திருப்பி என்னிடம் கேட்டுவிட்டு), “அவர்களுக்கு நான் பதில் (முகமன்) கூறிவிட்டேன். அவர்கள் விஷயத்தில் நான் செய்த பிரார்த்தனை (இறைவனிடம்) அங்கீகரிக்கப்படும். என் விஷயத்தில் அவர்கள் புரிந்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது” என்று சொன்னார்கள்.83 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا عبد الوهاب، حدثنا ايوب، عن ابن ابي مليكة، عن عايشة رضى الله عنها ان اليهود، اتوا النبي صلى الله عليه وسلم فقالوا السام عليك. قال " وعليكم ". فقالت عايشة السام عليكم، ولعنكم الله وغضب عليكم. فقال رسول الله صلى الله عليه وسلم " مهلا يا عايشة، عليك بالرفق، واياك والعنف او الفحش ". قالت اولم تسمع ما قالوا قال " اولم تسمعي ما قلت رددت عليهم، فيستجاب لي فيهم، ولا يستجاب لهم في
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6401
- Book Index
- 96
Grades
- -
