ஹதீஸ்கள்
#6266
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிதயாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (அவர்களை உடல்நலம் விசாரித்துவிட்டு) அவர்களிடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் வெளியேறி வந்தார்கள். அப்போது மக்கள், “அபூஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு “அவர்கள் அல்லாஹ்வின் மாட்சிமையால் நலமடைந்துவிட்டார்கள்” என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்ட அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மரணக்களையை) நபி (ஸல்) அவர்களிடம் நீர் காணவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இந்த நோயின் காரணத்தால் விரைவில் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். அப்துல் முத்தலிபின் மக்களுடைய முகங்களில் மரணக்களை (இருந்தால்அ)தனை நான் அடையாளம் அறிந்துகொள்வேன். ஆகவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். (அவர்கள் இறந்தபிறகு) இந்த ஆட்சி அதிகாரம் யாரிடமிருக்கும் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால், அதை நாம் அறிந்துகொள்ளலாம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால், அவர்களிடம் (அதைக் குறித்து) நாம் கோருவோம். அவர்கள் (தமக்குப்பின் பிரதிநிதி யார் என்பது பற்றி) இறுதியுபதேசம் செய்யலாம்” என்றார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு, நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால், (அவர்களுக்குப் பிறகு) மக்கள் ஒருபோதும் நமக்கு அதைத் தரமாட்டார்கள். உறுதியாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருபோதும் கேட்கமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا بشر بن شعيب، حدثني ابي، عن الزهري، قال اخبرني عبد الله بن كعب، ان عبد الله بن عباس، اخبره ان عليا يعني ابن ابي طالب خرج من عند النبي صلى الله عليه وسلم وحدثنا احمد بن صالح حدثنا عنبسة حدثنا يونس عن ابن شهاب قال اخبرني عبد الله بن كعب بن مالك ان عبد الله بن عباس اخبره ان علي بن ابي طالب رضى الله عنه خرج من عند النبي صلى الله عليه وسلم في وجعه الذي توفي فيه فقال الناس يا ابا حسن كيف اصبح رسول الله صلى الله عليه وسلم قال اصبح بحمد الله باريا فاخذ بيده العباس فقال الا تراه انت والله بعد الثلاث عبد العصا والله اني لارى رسول الله صلى الله عليه وسلم سيتوفى في وجعه، واني لاعرف في وجوه بني عبد المطلب الموت، فاذهب بنا الى رسول الله صلى الله عليه وسلم فنساله فيمن يكون الامر فان كان فينا علمنا ذلك، وان كان في غيرنا امرناه فاوصى بنا. قال علي والله لين سالناها رسول الله صلى الله عليه وسلم فيمنعنا لا يعطيناها الناس ابدا، واني لا اسالها رسول الله صلى الله عليه وسلم ابدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6266
- Book Index
- 40
Grades
- -
