ஹதீஸ்கள்
#6251
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந் தார்கள். (பள்ளிவாசலுக்குள் நுழைந்த) அவர் தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து அவர்களுக்கு சலாம் சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம்; திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். ஆகவே, அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம். திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். இரண்டாம் தடவையிலோ, அல்லது அதற்குப் பின்போ அவர் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (‘உளூ’) செய்! பிறகு கிப்லாவை முன்னோக்கி ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல். பிறகு குர்ஆனில் உனக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் தலையை உயர்த்தி நேராக நில். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்; அதில் (சற்று நேரம்) நிலை கொள். பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்ந்திரு. பிறகு (மீண்டும்) சிரவணக்கம் செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் எழுந்து நன்றாக அமர்ந்திரு. பிறகு இதே (நடை) முறையை உன் தொழுகை முழுவதிலும் கடைப்பிடி” என்று சொன்னார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றின் இறுதியில் (‘எழுந்து நன்றாக அமர்ந்திரு’ என்பதற்குப் பதிலாக) அபூஉசாமா (ரஹ்) அவர்கள் ‘(அடுத்த ரக்அத்துக்காக) எழுந்து நேராக நில்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الله بن نمير، حدثنا عبيد الله، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابي هريرة رضى الله عنه ان رجلا، دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس في ناحية المسجد فصلى، ثم جاء فسلم عليه فقال له رسول الله صلى الله عليه وسلم " وعليك السلام ارجع فصل فانك لم تصل ". فرجع فصلى، ثم جاء فسلم. فقال " وعليك السلام فارجع فصل، فانك لم تصل ". فقال في الثانية او في التي بعدها علمني يا رسول الله. فقال " اذا قمت الى الصلاة فاسبغ الوضوء، ثم استقبل القبلة فكبر، ثم اقرا بما تيسر معك من القران، ثم اركع حتى تطمين راكعا، ثم ارفع حتى تستوي قايما، ثم اسجد حتى تطمين ساجدا، ثم ارفع حتى تطمين جالسا، ثم اسجد حتى تطمين ساجدا، ثم ارفع حتى تطمين جالسا، ثم افعل ذلك في صلاتك كلها ". وقال ابو اسامة في الاخير " حتى تستوي قايما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6251
- Book Index
- 25
Grades
- -
