ஹதீஸ்கள்
#6230
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும் போது ‘அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸ லாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்’ (அடியார்களுக்குமுன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல்மீது சாந்தி உண்டாகட்டும். மீக்காயீல்மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார்மீது சாந்தி உண்டா கட்டும்) என்று கூறிவந்தோம். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ்வே ‘சலாம்’ (சாந்தியளிப்ப வன்) ஆக இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர் தொழுகையின் அமர்வில் இருக்கும் போது ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து; அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன’ (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் வளமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறியதாக அமையும். ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.9 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني شقيق، عن عبد الله، قال كنا اذا صلينا مع النبي صلى الله عليه وسلم قلنا السلام على الله قبل عباده، السلام على جبريل، السلام على ميكاييل، السلام على فلان، فلما انصرف النبي صلى الله عليه وسلم اقبل علينا بوجهه فقال " ان الله هو السلام، فاذا جلس احدكم في الصلاة فليقل التحيات لله، والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. فانه اذا قال ذلك اصاب كل عبد صالح في السماء والارض، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. ثم يتخير بعد من الكلام ما شاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6230
- Book Index
- 4
Grades
- -
