ஹதீஸ்கள்
#6229
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாலையின் உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا ابو عامر، حدثنا زهير، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " اياكم والجلوس بالطرقات ". فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها. فقال " اذا ابيتم الا المجلس فاعطوا الطريق حقه ". قالوا وما حق الطريق يا رسول الله قال " غض البصر، وكف الاذى، ورد السلام، والامر بالمعروف والنهى عن المنكر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6229
- Book Index
- 3
Grades
- -
