ஹதீஸ்கள்
#5771
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டுசெல்ல வேண்டாம்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதை பின்பு நான் செவியுற்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் முந்தைய ஹதீஸை (தாம் அறிவிக்கவில்லையென்று) மறுத்தார்கள். நாங்கள், ‘‘தொற்றுநோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நீங்கள் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டோம். அவர்கள் (தாம் கூறவில்லையென்று மறுத்துக் கோபத்துடன்) அபிசீனிய மொழியில் ஏதோ பேசினார்கள். இதைத் தவிர (தாம் அறிவித்த) வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்து நான் பார்த்ததில்லை. அத்தியாயம் :
وعن ابي سلمة، سمع ابا هريرة، بعد يقول قال النبي صلى الله عليه وسلم " لا يوردن ممرض على مصح ". وانكر ابو هريرة حديث الاول قلنا الم تحدث انه لا عدوى فرطن بالحبشية. قال ابو سلمة فما رايته نسي حديثا غيره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5771
- Book Index
- 85
Grades
- -
