ஹதீஸ்கள்
#5762
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். ‘‘அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் சில வேளைகளில் எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகிவிடுகிறதே (அது எப்படி?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக்கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.87 அறிவிப்பாளர் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸில்) ‘அந்த உண்மையான சொல்...’ எனத் தொடங்கும் இறுதித் தொடரை அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் நபியவர்களின் சொல்லாக (முதலில்) கூறவில்லை. பிறகு, அது நபியவர்களின் சொல்லே என அவர் கூறினார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا هشام بن يوسف، اخبرنا معمر، عن الزهري، عن يحيى بن عروة بن الزبير، عن عروة، عن عايشة رضى الله عنها قالت سال رسول الله صلى الله عليه وسلم ناس عن الكهان. فقال " ليس بشىء ". فقالوا يا رسول الله انهم يحدثونا احيانا بشىء فيكون حقا. فقال رسول الله صلى الله عليه وسلم " تلك الكلمة من الحق، يخطفها من الجني، فيقرها في اذن وليه، فيخلطون معها ماية كذبة ". قال علي قال عبد الرزاق مرسل، الكلمة من الحق. ثم بلغني انه اسنده بعده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5762
- Book Index
- 76
Grades
- -
