ஹதீஸ்கள்
#5758
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைல்’ குலத்துப் பெண்கள் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர் (கணவர்), ‘‘உண்ணவோ பருகவோ, மொழியவோ அழவோ முடியாத ஒரு சிசுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது அல்லாஹ்வின் தூதரே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، حدثنا الليث، قال حدثنا عبد الرحمن بن خالد، عن ابن شهاب، عن ابي سلمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قضى في امراتين من هذيل اقتتلتا، فرمت احداهما الاخرى بحجر، فاصاب بطنها وهى حامل، فقتلت ولدها الذي في بطنها فاختصموا الى النبي صلى الله عليه وسلم فقضى ان دية ما في بطنها غرة عبد او امة، فقال ولي المراة التي غرمت كيف اغرم يا رسول الله من لا شرب، ولا اكل، ولا نطق، ولا استهل، فمثل ذلك يطل فقال النبي صلى الله عليه وسلم " انما هذا من اخوان الكهان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5758
- Book Index
- 73
Grades
- -
