ஹதீஸ்கள்
#5736
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய தோழர் களில் சிலர் (ஒரு பயணத்தின்போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவருக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித்தோழர்களிடம் வந்து) ‘‘உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?” என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், ‘‘நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன்வரவில்லை. ஆகவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தால் தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப்பார்க்கமாட்டோம்” என்று கூறினர். உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) ‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காத வரை இதை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு, ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித்தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக்கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.68 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن ابي بشر، عن ابي المتوكل، عن ابي سعيد الخدري رضى الله عنه ان ناسا من اصحاب النبي صلى الله عليه وسلم اتوا على حى من احياء العرب فلم يقروهم، فبينما هم كذلك اذ لدغ سيد اوليك فقالوا هل معكم من دواء او راق فقالوا انكم لم تقرونا، ولا نفعل حتى تجعلوا لنا جعلا. فجعلوا لهم قطيعا من الشاء، فجعل يقرا بام القران، ويجمع بزاقه، ويتفل، فبرا، فاتوا بالشاء، فقالوا لا ناخذه حتى نسال النبي صلى الله عليه وسلم فسالوه فضحك وقال " وما ادراك انها رقية، خذوها، واضربوا لي بسهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5736
- Book Index
- 51
Grades
- -
