ஹதீஸ்கள்
#5735
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம்மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நானே அவற்றை ஓதி அவர்கள்மீது ஊதிக்கொண்டும் அவர்களுடைய கையாலேயே (அவர்கள்மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களுடைய கரத்தின் வளம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் இரு கரங்களின் மீதும் ஊதி பிறகு அவற்றால் தமது முகத்தில் தடவிவந்தார் கள்” என்று பதிலளித்தார்கள்.66 அத்தியாயம் :
حدثني ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم كان ينفث على نفسه في المرض الذي مات فيه بالمعوذات، فلما ثقل كنت انفث عليه بهن، وامسح بيد نفسه لبركتها. فسالت الزهري كيف ينفث قال كان ينفث على يديه، ثم يمسح بهما وجهه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5735
- Book Index
- 50
Grades
- -
