ஹதீஸ்கள்
#5734
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். ஆகவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதிபூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலைகுலையாமல்) இருப்பாராயின், அவருக்கு உயிர்த்தியாகிக்குக் கிடைக்கும் நன்மை போன்றது (மறுமையில்) கிடைக்கும்.64 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5734
- Book Index
- 49
Grades
- -