ஹதீஸ்கள்
#5730
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவி விட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) நீங்கள் வெளியேறாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عبد الله بن عامر، ان عمر، خرج الى الشام، فلما كان بسرغ بلغه ان الوباء قد وقع بالشام، فاخبره عبد الرحمن بن عوف ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا سمعتم به بارض فلا تقدموا عليه واذا وقع بارض وانتم بها فلا تخرجوا فرارا منه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5730
- Book Index
- 45
Grades
- -
