ஹதீஸ்கள்
#5729
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள்.59 ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.60 அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘‘ஆரம்பக்கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், ‘‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிóருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை” என்று சொன்னார்கள். வேறுசிலர், ‘‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘என்னிடம் (மதீனாவாசி களான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போதும் உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையே யும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), ‘‘மக்களுடன் நீங்கள் திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகின்றோம்” என்றனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே, ‘‘நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள். அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூஉபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி விட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர் கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?” என்று கேட்டார்கள். அப்போது தமது தேவையொன்றுக் காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட் டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லா தீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், (தமது முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5729
- Book Index
- 44
Grades
- -