ஹதீஸ்கள்
#5728
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்ப தாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்.58 ‘‘இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் (என் தந்தை) சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் அறிவிக்க நான் கேட்டேன்” என்று இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம், ‘‘உசாமா (ரலி) அவர்கள் (உங்கள் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، قال اخبرني حبيب بن ابي ثابت، قال سمعت ابراهيم بن سعد، قال سمعت اسامة بن زيد، يحدث سعدا عن النبي صلى الله عليه وسلم قال " اذا سمعتم بالطاعون بارض فلا تدخلوها، واذا وقع بارض وانتم بها فلا تخرجوا منها ". فقلت انت سمعته يحدث سعدا ولا ينكره قال نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5728
- Book Index
- 43
Grades
- -
