ஹதீஸ்கள்
#5722
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களுடைய (முன்வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து, அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.51 அத்தியாயம் :
حدثني سعيد بن عفير، حدثنا يعقوب بن عبد الرحمن القاري، عن ابي حازم، عن سهل بن سعد الساعدي، قال لما كسرت على راس رسول الله صلى الله عليه وسلم البيضة، وادمي وجهه، وكسرت رباعيته، وكان علي يختلف بالماء في المجن، وجاءت فاطمة تغسل عن وجهه الدم، فلما رات فاطمة عليها السلام الدم يزيد على الماء كثرة عمدت الى حصير فاحرقتها والصقتها على جرح رسول الله صلى الله عليه وسلم فرقا الدم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5722
- Book Index
- 37
Grades
- -
