ஹதீஸ்கள்
#5720
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அய்யூப் (ரஹ்) அவர்களுக்கு அபூகிலாபா (ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக்காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப் (ரஹ்) அவர்கள் (அபூகிலாபா (ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன; அய்யூப் (ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக்காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம்பெற்றிருந்தது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது கையால் எனக்குச் சூடிட்டார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும் காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூதல்ஹா (ரலி), அனஸ் பின் நள்ர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள்தான் எனக்குச் சூடிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عارم، حدثنا حماد، قال قري على ايوب من كتب ابي قلابة، منه ما حدث به ومنه ما قري عليه، وكان هذا في الكتاب عن انس ان ابا طلحة وانس بن النضر كوياه، وكواه ابو طلحة بيده. وقال عباد بن منصور عن ايوب، عن ابي قلابة، عن انس بن مالك، قال اذن رسول الله صلى الله عليه وسلم لاهل بيت من الانصار ان يرقوا من الحمة والاذن. قال انس كويت من ذات الجنب ورسول الله صلى الله عليه وسلم حى، وشهدني ابو طلحة وانس بن النضر وزيد بن ثابت، وابو طلحة كواني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5720
- Book Index
- 36
Grades
- -
