ஹதீஸ்கள்
#5697
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் நிவாரணம் உள்ளது’ என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن تليد، قال حدثني ابن وهب، قال اخبرني عمرو، وغيره، ان بكيرا، حدثه ان عاصم بن عمر بن قتادة حدثه ان جابر بن عبد الله رضى الله عنهما عاد المقنع ثم قال لا ابرح حتى تحتجم فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان فيه شفاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5697
- Book Index
- 19
Grades
- -
