ஹதீஸ்கள்
#5696
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூஉபைதா ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூதய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூதய்பாவின் எசமானர்களுடன் நபி (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், கடல் கோஷ்டமும்தான்.19 மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களுடைய) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا حميد الطويل، عن انس رضى الله عنه انه سيل عن اجر الحجام، فقال احتجم رسول الله صلى الله عليه وسلم حجمه ابو طيبة، واعطاه صاعين من طعام، وكلم مواليه فخففوا عنه، وقال " ان امثل ما تداويتم به الحجامة والقسط البحري ". وقال " لا تعذبوا صبيانكم بالغمز من العذرة، وعليكم بالقسط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5696
- Book Index
- 18
Grades
- -
