ஹதீஸ்கள்
#5688
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கருஞ்சீரக விதையில் ‘சாமை’த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்பது பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني ابو سلمة، وسعيد بن المسيب، ان ابا هريرة، اخبرهما انه، سمع رسول الله صلى الله عليه وسلم يقول " في الحبة السوداء شفاء من كل داء الا السام ". قال ابن شهاب والسام الموت، والحبة السوداء الشونيز
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5688
- Book Index
- 11
Grades
- -
