ஹதீஸ்கள்
#5686
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்பவெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறுநீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து)வர (ஆட்களை) அனுப்பிவைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபி (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர் களுடைய கண்களில் சூடிட்டார்கள்.8 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن قتادة، عن انس رضى الله عنه ان ناسا، اجتووا في المدينة فامرهم النبي صلى الله عليه وسلم ان يلحقوا براعيه يعني الابل فيشربوا من البانها وابوالها، فلحقوا براعيه فشربوا من البانها وابوالها، حتى صلحت ابدانهم فقتلوا الراعي وساقوا الابل، فبلغ النبي صلى الله عليه وسلم فبعث في طلبهم، فجيء بهم فقطع ايديهم وارجلهم، وسمر اعينهم. قال قتادة فحدثني محمد بن سيرين ان ذلك كان قبل ان تنزل الحدود
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5686
- Book Index
- 9
Grades
- -
