ஹதீஸ்கள்
#5685
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனா வந்த ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்” என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப்பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது ‘‘மதீனா(வின் தட்பவெப்ப நிலை) எங்களுக்கு ஒத்துவரவில்லை” என்று கூறினர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து, ‘‘இவற்றின் பாலை அருந்துங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி (ஸல்) அவர்களுடைய (ஒட்டக) மேய்ப்பாள ரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய ஒட்டகங்களை இழுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின்தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப்பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்துவரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களுடைய கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களின் கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவன் இறக்கும்வரை தனது நாவால் தரையை நக்கியபடி இருந்ததை நான் பார்த்தேன்.7 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சல்லாம் பின் மிஸ்கீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ‘‘நபி (ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்ததாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்தபோது, ‘‘(ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்வார் என்ப தால்) அவருக்கு இதை அனஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென நான் விரும்பினேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا سلام بن مسكين، حدثنا ثابت، عن انس، ان ناسا، كان بهم سقم قالوا يا رسول الله اونا واطعمنا فلما صحوا قالوا ان المدينة وخمة. فانزلهم الحرة في ذود له فقال " اشربوا البانها ". فلما صحوا قتلوا راعي النبي صلى الله عليه وسلم واستاقوا ذوده، فبعث في اثارهم، فقطع ايديهم وارجلهم، وسمر اعينهم، فرايت الرجل منهم يكدم الارض بلسانه حتى يموت. قال سلام فبلغني ان الحجاج قال لانس حدثني باشد عقوبة عاقبه النبي صلى الله عليه وسلم فحدثه بهذا. فبلغ الحسن فقال وددت انه لم يحدثه بهذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5685
- Book Index
- 8
Grades
- -
