ஹதீஸ்கள்
#5672
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழுமுறை சூடுபோட்டிருந் தார்கள். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: முன்சென்றுவிட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப்பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தமது (வீட்டுச்) சுவரைக் கட்டிக் கொண்டிருந்த அவர்கள் ‘‘ஒரு முஸ்லிம், தாம் செய்கின்ற எல்லாச் செலவினங் களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கின்ற செலவைத் தவிர” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن اسماعيل بن ابي خالد، عن قيس بن ابي حازم، قال دخلنا على خباب نعوده وقد اكتوى سبع كيات فقال ان اصحابنا الذين سلفوا مضوا ولم تنقصهم الدنيا وانا اصبنا ما لا نجد له موضعا الا التراب ولولا ان النبي صلى الله عليه وسلم نهانا ان ندعو بالموت لدعوت به، ثم اتيناه مرة اخرى وهو يبني حايطا له فقال ان المسلم ليوجر في كل شىء ينفقه الا في شىء يجعله في هذا التراب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5672
- Book Index
- 32
Grades
- -
