ஹதீஸ்கள்
#5669
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (ஒருபோதும்) வழி தவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது (அவர்களை எழுதித் தருமாறு தொந்தரவு செய்யாதீர்கள்). உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே. (நபியவர்களுக்கு அருளப்பெற்ற அந்த) இறைவேதமே நமக்குப் போதும்” என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிருந்தோர் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுவந்து கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறி(ச் சென்றி)டமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் கூறியதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அருகில் மக்களின் கூச்சலும் சச்சரவும் மிகுந்தபோது, ‘‘(என்னிடமிருந்து) எழுந்து (சென்று)விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் .ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக் கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுதித் தர நினைத்த) மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறிவந் தார்கள்.26 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، حدثنا هشام، عن معمر، وحدثني عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس رضى الله عنهما قال لما حضر رسول الله صلى الله عليه وسلم وفي البيت رجال فيهم عمر بن الخطاب قال النبي صلى الله عليه وسلم " هلم اكتب لكم كتابا لا تضلوا بعده ". فقال عمر ان النبي صلى الله عليه وسلم قد غلب عليه الوجع وعندكم القران، حسبنا كتاب الله فاختلف اهل البيت فاختصموا، منهم من يقول قربوا يكتب لكم النبي صلى الله عليه وسلم كتابا لن تضلوا بعده، ومنهم من يقول ما قال عمر فلما اكثروا اللغو والاختلاف عند النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم " قوموا ". قال عبيد الله فكان ابن عباس يقول ان الرزية كل الرزية ما حال بين رسول الله صلى الله عليه وسلم وبين ان يكتب لهم ذلك الكتاب من اختلافهم ولغطهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5669
- Book Index
- 29
Grades
- -
