ஹதீஸ்கள்
#5666
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை கடுமையான தலைவலியால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் தலை(வலி)யே!” என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக்கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால்தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாகச் செயல்படும்படி) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற் காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட் டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்க வில்லை)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى ابو زكرياء، اخبرنا سليمان بن بلال، عن يحيى بن سعيد، قال سمعت القاسم بن محمد، قال قالت عايشة واراساه. فقال رسول الله صلى الله عليه وسلم " ذاك لو كان وانا حى، فاستغفر لك وادعو لك ". فقالت عايشة واثكلياه، والله اني لاظنك تحب موتي، ولو كان ذاك لظللت اخر يومك معرسا ببعض ازواجك. فقال النبي صلى الله عليه وسلم " بل انا واراساه لقد هممت او اردت ان ارسل الى ابي بكر وابنه، واعهد ان يقول القايلون او يتمنى المتمنون، ثم قلت يابى الله ويدفع المومنون، او يدفع الله ويابى المومنون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5666
- Book Index
- 26
Grades
- -
