ஹதீஸ்கள்
#5663
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன்மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதன்மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு (நோய்வாய்ப்பட்டி ருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர் களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார் கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது.- அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர் களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார்.-அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளும் முன் இது நடந்தது.-அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந் தார்கள். (எங்கள்) ஊர்திப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல் துண்டால் தமது மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, ‘‘எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தமது வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ‘‘மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். (அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ‘‘இல்லை; அல்லாஹ்வின் தூதரே! எங்களது (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்று சொன்னார் கள். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத்தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மௌனமாகும்வரை மக்களை அமைதிப் படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘சஅதே! அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் செவியுற வில்லையா? (அவர் இன்னின்னவாறு சொன்னார்)” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (மார்க்கத்)தை வழங்கி விட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகரவாசிகள் அப்துல்லாஹ்வுக் குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து மறுக்கப்பட்டபோது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந் துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
حدثني يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، ان اسامة بن زيد، اخبره ان النبي صلى الله عليه وسلم ركب على حمار على اكاف على قطيفة فدكية، واردف اسامة وراءه يعود سعد بن عبادة قبل وقعة بدر فسار حتى مر بمجلس فيه عبد الله بن ابى ابن سلول وذلك قبل ان يسلم عبد الله، وفي المجلس اخلاط من المسلمين والمشركين عبدة الاوثان واليهود، وفي المجلس عبد الله بن رواحة، فلما غشيت المجلس عجاجة الدابة خمر عبد الله بن ابى انفه بردايه، قال لا تغيروا علينا فسلم النبي صلى الله عليه وسلم ووقف ونزل فدعاهم الى الله فقرا عليهم القران، فقال له عبد الله بن ابى يا ايها المرء انه لا احسن مما تقول ان كان حقا، فلا توذنا به في مجلسنا، وارجع الى رحلك فمن جاءك فاقصص عليه. قال ابن رواحة بلى يا رسول الله فاغشنا به في مجالسنا فانا نحب ذلك فاستب المسلمون والمشركون واليهود حتى كادوا يتثاورون فلم يزل النبي صلى الله عليه وسلم حتى سكتوا فركب النبي صلى الله عليه وسلم دابته حتى دخل على سعد بن عبادة فقال له " اى سعد الم تسمع ما قال ابو حباب ". يريد عبد الله بن ابى. قال سعد يا رسول الله اعف عنه واصفح فلقد اعطاك الله ما اعطاك ولقد اجتمع اهل هذه البحرة ان يتوجوه فيعصبوه فلما رد ذلك بالحق الذي اعطاك شرق بذلك، فذلك الذي فعل به ما رايت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5663
- Book Index
- 23
Grades
- -
