ஹதீஸ்கள்
#5659
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் நபியே! நான் செல்வத்தை விட்டுச்செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொரு மகளைத்தான் நான் (என் வாரிசாக) விட்டுச்செல்கிறேன். ஆகவே, என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை (தானம் செய்யும்படி) இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டு (வாரிசான என் மகளுக்கு) மூன்றில் ஒரு பங்கை மட்டும் விட்டுச்செல்லட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், ‘‘பாதிப் பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டுப் பாதியை (என் மகளுக்கு) விட்டுச்செல்லட் டுமா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், ‘‘அப்படியென்றால் மூன்றில் ஒரு பங்கில் (தானம் செய்யும்படி) இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டு இரண்டில் ஒரு பங்கை அவளுக்காக விட்டுச்செல்லட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மூன்றில் ஒரு பங்கா? மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான்” என்று சொன்னார்கள்.18 பிறகு தமது கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘‘இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அவர்களது (கரத்தின்) குளிர்ச்சியை என் ஈரலில் இப்போதும்கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، اخبرنا الجعيد، عن عايشة بنت سعد، ان اباها، قال تشكيت بمكة شكوا شديدا، فجاءني النبي صلى الله عليه وسلم يعودني، فقلت يا نبي الله اني اترك مالا واني لم اترك الا ابنة واحدة، فاوصي بثلثى مالي واترك الثلث فقال " لا ". قلت فاوصي بالنصف واترك النصف قال " لا ". قلت فاوصي بالثلث واترك لها الثلثين قال " الثلث والثلث كثير ". ثم وضع يده على جبهته، ثم مسح يده على وجهي وبطني ثم قال " اللهم اشف سعدا واتمم له هجرته ". فما زلت اجد برده على كبدي فيما يخال الى حتى الساعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5659
- Book Index
- 19
Grades
- -
