ஹதீஸ்கள்
#5658
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களை உடல்நலம் விசாரிப்ப தற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உட்காருங்கள்’ என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, ‘‘(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். ஆகவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து ‘ருகூஉ’ செய்)யுங்கள். அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார்கள். ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இறுதியாகத் தொழுதபோது, மக்கள் நபியவர்கள் பின்னால் நின்றுகொண்டு தொழ, நபியவர்கள் மட்டும் உட்கார்ந்து தொழு(வித்)தார்கள்.17 அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، حدثنا هشام، قال اخبرني ابي، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم دخل عليه ناس يعودونه في مرضه فصلى بهم جالسا فجعلوا يصلون قياما، فاشار اليهم اجلسوا، فلما فرغ قال " ان الامام ليوتم به، فاذا ركع فاركعوا واذا رفع فارفعوا، وان صلى جالسا فصلوا جلوسا ". قال ابو عبد الله قال الحميدي هذا الحديث منسوخ لان النبي صلى الله عليه وسلم اخر ما صلى صلى قاعدا والناس خلفه قيام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5658
- Book Index
- 18
Grades
- -
