ஹதீஸ்கள்
#5655
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்-ரலி) அவர்கள் தம்முடைய மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே, அங்கு வந்து சேரவேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் நானும் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும் இருந்தோம். -உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.- உடனே நபி (ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, ‘‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக; பொறுமை யைக் கைக்கொள்வாயாக” எனக் கூறி யனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டு மென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார் கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களின் மடியில், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் இரு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ் வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர் களே!)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத் துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார் கள்.13 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني عاصم، قال سمعت ابا عثمان، عن اسامة بن زيد رضى الله عنهما ان ابنة للنبي، صلى الله عليه وسلم ارسلت اليه وهو مع النبي صلى الله عليه وسلم وسعد وابى نحسب ان ابنتي قد حضرت فاشهدنا فارسل اليها السلام ويقول " ان لله ما اخذ وما اعطى وكل شىء عنده مسمى فلتحتسب ولتصبر ". فارسلت تقسم عليه، فقام النبي صلى الله عليه وسلم وقمنا، فرفع الصبي في حجر النبي صلى الله عليه وسلم ونفسه تقعقع ففاضت عينا النبي صلى الله عليه وسلم فقال له سعد ما هذا يا رسول الله قال " هذه رحمة وضعها الله في قلوب من شاء من عباده، ولا يرحم الله من عباده الا الرحماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5655
- Book Index
- 15
Grades
- -
