ஹதீஸ்கள்
#5639
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது அஸ்ர் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது மிச்சமிருந்த சிறிதுத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் தமது கையை நுழைத்துத் தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அவர்கள், ‘‘அங்கத் தூய்மை (உளூ) செய்பவர்களே! தண்ணீரிடம் வாருங்கள். இந்த வளம் (பரக்கத்) அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும்” என அழைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையே இருந்து தண்ணீர் பீறிட்டுப் பாய்வதை நான் கண்டேன். மக்கள் (அதில்) அங்கத் தூய்மை செய்து அதை அருந்தவும் செய்தார்கள். நான் அதை வயிறு நிரம்ப அருந்துவதில் குறைவைக்கவில்லை. ஏனெனில், அது வளம் (பரக்கத்) மிக்கது என நான் அறிந் திருந்தேன். அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்க, ‘‘நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.58 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، قال حدثني سالم بن ابي الجعد، عن جابر بن عبد الله رضى الله عنهما هذا الحديث قال قد رايتني مع النبي صلى الله عليه وسلم وقد حضرت العصر وليس معنا ماء غير فضلة فجعل في اناء، فاتي النبي صلى الله عليه وسلم به فادخل يده فيه وفرج اصابعه ثم قال " حى على اهل الوضوء، البركة من الله ". فلقد رايت الماء يتفجر من بين اصابعه، فتوضا الناس وشربوا، فجعلت لا الو ما جعلت في بطني منه، فعلمت انه بركة. قلت لجابر كم كنتم يوميذ قال الفا واربعماية. تابعه عمرو عن جابر. وقال حصين وعمرو بن مرة عن سالم عن جابر خمس عشرة ماية. وتابعه سعيد بن المسيب عن جابر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5639
- Book Index
- 65
Grades
- -
