ஹதீஸ்கள்
#5637
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்துகொள்ள) அழைத்துவரும்படி அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்துவர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து ‘பனூ சாஇதா’ குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண் மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண் ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், ‘‘உங்களிட மிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ‘‘என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), ‘‘இவர்கள் யார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள் ‘‘தெரியாது” என்று பதிலளித்தாள். மக்கள், ‘‘இவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று சொன்னார்கள். அந்தப் பெண் ‘‘அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவதியாகிவிட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினாள்.56 நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் முன்னே சென்று ‘பனூ சாஇதா’ குலத்தாரின் சமுதாயக்கூடத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ‘‘எங்களுக் குப் பருக (ஏதேனும்) கொடுங்கள், சஹ்லே!” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: சஹ்ல் (ரலி) அவர்கள் அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل بن سعد رضى الله عنه قال ذكر للنبي صلى الله عليه وسلم امراة من العرب، فامر ابا اسيد الساعدي ان يرسل اليها فارسل اليها، فقدمت فنزلت في اجم بني ساعدة، فخرج النبي صلى الله عليه وسلم حتى جاءها فدخل عليها فاذا امراة منكسة راسها، فلما كلمها النبي صلى الله عليه وسلم قالت اعوذ بالله منك. فقال " قد اعذتك مني ". فقالوا لها اتدرين من هذا قالت لا. قالوا هذا رسول الله صلى الله عليه وسلم جاء ليخطبك. قالت كنت انا اشقى من ذلك. فاقبل النبي صلى الله عليه وسلم يوميذ حتى جلس في سقيفة بني ساعدة هو واصحابه، ثم قال " اسقنا يا سهل ". فخرجت لهم بهذا القدح فاسقيتهم فيه، فاخرج لنا سهل ذلك القدح فشربنا منه. قال ثم استوهبه عمر بن عبد العزيز بعد ذلك فوهبه له
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5637
- Book Index
- 63
Grades
- -
