ஹதீஸ்கள்
#5604
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளன்று நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.28 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே, உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பி வைத்தார்கள்” என்று (‘‘உம்முல் பள்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், ‘‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்சலா(ன ஹதீஸா)?” என்று கேட்கப்பட்டால், ‘‘இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன் (ஆகவே, இது ‘மவ்ஸூல்’தான்)” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، سمع سفيان، اخبرنا سالم ابو النضر، انه سمع عميرا، مولى ام الفضل يحدث عن ام الفضل، قالت شك الناس في صيام رسول الله صلى الله عليه وسلم يوم عرفة، فارسلت اليه باناء فيه لبن فشرب. فكان سفيان ربما قال شك الناس في صيام رسول الله صلى الله عليه وسلم يوم عرفة فارسلت اليه ام الفضل. فاذا وقف عليه قال هو عن ام الفضل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5604
- Book Index
- 30
Grades
- -
