ஹதீஸ்கள்
#5566
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தமது குர்பானி பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தமது) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம்முடைய அந்த ஒட்டகத்திற்கு (அது குர்பானி பிராணி என்பதைக் காட்டும் அடையாள மாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள்வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்துகொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய (இந்தக்) குர்பானி பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களுடைய குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும்வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا اسماعيل، عن الشعبي، عن مسروق، انه اتى عايشة، فقال لها يا ام المومنين ان رجلا يبعث بالهدى الى الكعبة، ويجلس في المصر، فيوصي ان تقلد بدنته، فلا يزال من ذلك اليوم محرما حتى يحل الناس. قال فسمعت تصفيقها من وراء الحجاب فقالت لقد كنت افتل قلايد هدى رسول الله صلى الله عليه وسلم فيبعث هديه الى الكعبة، فما يحرم عليه مما حل للرجال من اهله، حتى يرجع الناس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5566
- Book Index
- 22
Grades
- -
