ஹதீஸ்கள்
#5556
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபுர்தா என்றழைக்கப்பட்டுவந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)” என்று சொன்னார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது” என்று சொல்லிவிட்டு, ‘‘தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுப்பவர், தமக் காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக் குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்óம்களின் வழிமுறையைப் பின்பற்றி விட்டார்” என்று கூறினார்கள்.13 இந்த ஹதீஸ் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் ‘அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது” என அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا خالد بن عبد الله، حدثنا مطرف، عن عامر، عن البراء بن عازب رضى الله عنهما قال ضحى خال لي يقال له ابو بردة قبل الصلاة، فقال له رسول الله صلى الله عليه وسلم " شاتك شاة لحم ". فقال يا رسول الله ان عندي داجنا جذعة من المعز. قال " اذبحها ولن تصلح لغيرك ". ثم قال " من ذبح قبل الصلاة فانما يذبح لنفسه، ومن ذبح بعد الصلاة فقد تم نسكه، واصاب سنة المسلمين ". تابعه عبيدة عن الشعبي وابراهيم. وتابعه وكيع عن حريث عن الشعبي. وقال عاصم وداود عن الشعبي عندي عناق لبن. وقال زبيد وفراس عن الشعبي عندي جذعة. وقال ابو الاحوص حدثنا منصور عناق جذعة. وقال ابن عون عناق جذع، عناق لبن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5556
- Book Index
- 12
Grades
- -
