ஹதீஸ்கள்
#5549
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.8 அத்தியாயம் :
حدثنا صدقة، اخبرنا ابن علية، عن ايوب، عن ابن سيرين، عن انس بن مالك، قال قال النبي صلى الله عليه وسلم يوم النحر " من كان ذبح قبل الصلاة فليعد ". فقام رجل فقال يا رسول الله ان هذا يوم يشتهى فيه اللحم وذكر جيرانه وعندي جذعة خير من شاتى لحم. فرخص له في ذلك، فلا ادري ابلغت الرخصة من سواه ام لا، ثم انكفا النبي صلى الله عليه وسلم الى كبشين فذبحهما، وقام الناس الى غنيمة فتوزعوها او قال فتجزعوها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5549
- Book Index
- 5
Grades
- -
