ஹதீஸ்கள்
#5368
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்துவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் (என்ன நடந்தது)?” என்று கேட்டார்கள். அவர், ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் அடிமையை விடுதலை செய்துவிடுவீராக” என்று சொன்னார்கள். அதற்கு அவர் ‘‘என்னிடம் அடிமை இல்லையே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘அது என்னால் இயலாது” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக” என்று சொன்னார்கள். அம்மனிதர், ‘‘என்னிடம் வசதி இல்லையே!” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு பெரிய கூடை (அரக்) கொண்டுவரப்பட்டது. உடனே அவர்கள், ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இதோ! நான்தான் அது” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைத் தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அவர் ‘‘எங்களைவிட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன்மீது ஆணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘‘அப்படியென்றால் நீங்கள்தான் (அதற்கு உரியவர்கள்)” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه قال اتى النبي صلى الله عليه وسلم رجل فقال هلكت. قال " ولم ". قال وقعت على اهلي في رمضان. قال " فاعتق رقبة ". قال ليس عندي. قال " فصم شهرين متتابعين ". قال لا استطيع. قال " فاطعم ستين مسكينا ". قال لا اجد. فاتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال " اين السايل ". قال ها انا ذا. قال " تصدق بهذا ". قال على احوج منا يا رسول الله فوالذي بعثك بالحق ما بين لابتيها اهل بيت احوج منا فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت انيابه قال " فانتم اذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5368
- Book Index
- 18
Grades
- -
