ஹதீஸ்கள்
#5367
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’ விட்டுச்சென்றார்கள். ஆகவே, (கன்னிகழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்று சொன்னேன். அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணையா? கன்னிகழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை; கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக்குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று சொன்னார்கள். அதற்கு நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், பல பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு ‘வளம் வழங்குவானாக’ அல்லது ‘நன்மையைப் பொழிவானாக’ என்று சொன்னார்கள்.21 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد بن زيد، عن عمرو، عن جابر بن عبد الله رضى الله عنهما قال هلك ابي وترك سبع بنات او تسع بنات فتزوجت امراة ثيبا فقال لي رسول الله صلى الله عليه وسلم " تزوجت يا جابر ". فقلت نعم. فقال " بكرا ام ثيبا ". قلت بل ثيبا. قال " فهلا جارية تلاعبها وتلاعبك، وتضاحكها وتضاحكك ". قال فقلت له ان عبد الله هلك وترك بنات، واني كرهت ان اجييهن بمثلهن، فتزوجت امراة تقوم عليهن وتصلحهن. فقال " بارك الله لك ". او قال خيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5367
- Book Index
- 17
Grades
- -
