ஹதீஸ்கள்
#5362
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும்போது முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்!” என்று கூறினார்கள்.16 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும். (தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள்) ‘‘இவற்றை (நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒருநாளும் ஓதாமல்) நான் விட்டதில்லை” என்று கூறினார்கள். அவர்களிடம், ‘ஸிஃப்பீன்’ போரின் இரவில்கூடவா விட்டதில்லை? என்று கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில்கூடத்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا عبيد الله بن ابي يزيد، سمع مجاهدا، سمعت عبد الرحمن بن ابي ليلى، يحدث عن علي بن ابي طالب، ان فاطمة عليها السلام اتت النبي صلى الله عليه وسلم تساله خادما فقال " الا اخبرك ما هو خير لك منه، تسبحين الله عند منامك ثلاثا وثلاثين، وتحمدين الله ثلاثا وثلاثين، وتكبرين الله اربعا وثلاثين ". ثم قال سفيان احداهن اربع وثلاثون فما تركتها بعد، قيل ولا ليلة صفين قال ولا ليلة صفين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5362
- Book Index
- 12
Grades
- -
