ஹதீஸ்கள்
#5041
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்குஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக் கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். (அவர் தொழுகையை முடித்ததும் அவரது மேல்துண்டை) அவரது கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘‘இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியுற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் ஓதிக்கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார். உடனே நான், ‘‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மிடம் நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக்கொடுத்தார்கள்” என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். இந்த அத்தியாயத்தை நீங்கள் எனக்கு (வேறு முறையில்) ஓதிக்கொடுத்துள்ளீர்கள்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஹிஷாமே, அதை ஓதுங்கள்!” என்றார்கள். உடனே அவர், நான் அவரிடமிருந்து செவியுற்றபடியே (நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும்) ஓதிக்காட்டினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள். பிறகு (என்னைப் பார்த்து), ‘‘நீங்கள் ஓதுங்கள், உமரே!” என்று சொன்னார்கள். எனக்கு நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொடுத்தபடி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, ‘‘இந்த குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டுள்ளது. ஆகவே, உங்களுக்கு அவற்றில் எளிதானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.54 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5041
- Book Index
- 65
Grades
- -