ஹதீஸ்கள்
#4274
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர் களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்' எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் “ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு)விடுவோம்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்பாளர்களிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார் கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப் பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பாளர்களான) மக்கா வாசிகளுக்கு நான் உபகாரம் எதை யாவது செய்து அதற்குப் பிரதியுப காரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகரின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ர் போரில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒருவேளை, அல்லாஹ் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள்.314 அப்போது அல்லாஹ் பின்வரும் (60ஆவது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறுத்துவிட்டவர்கள்...(60:1) அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا سفيان، عن عمرو بن دينار، قال اخبرني الحسن بن محمد، انه سمع عبيد الله بن ابي رافع، يقول سمعت عليا رضى الله عنه يقول بعثني رسول الله صلى الله عليه وسلم انا والزبير والمقداد فقال " انطلقوا حتى تاتوا روضة خاخ، فان بها ظعينة معها كتاب، فخذوا منها ". قال فانطلقنا تعادى بنا خيلنا حتى اتينا الروضة، فاذا نحن بالظعينة قلنا لها اخرجي الكتاب. قالت ما معي كتاب. فقلنا لتخرجن الكتاب او لنلقين الثياب، قال فاخرجته من عقاصها، فاتينا به رسول الله صلى الله عليه وسلم فاذا فيه من حاطب بن ابي بلتعة الى ناس بمكة من المشركين، يخبرهم ببعض امر رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم " يا حاطب ما هذا ". قال يا رسول الله لا تعجل على، اني كنت امرا ملصقا في قريش يقول كنت حليفا ولم اكن من انفسها وكان من معك من المهاجرين من لهم قرابات، يحمون اهليهم واموالهم، فاحببت اذ فاتني ذلك من النسب فيهم ان اتخذ عندهم يدا يحمون قرابتي، ولم افعله ارتدادا عن ديني، ولا رضا بالكفر بعد الاسلام. فقال رسول الله صلى الله عليه وسلم " اما انه قد صدقكم ". فقال عمر يا رسول الله دعني اضرب عنق هذا المنافق. فقال " انه قد شهد بدرا، وما يدريك لعل الله اطلع على من شهد بدرا قال اعملوا ما شيتم فقد غفرت لكم ". فانزل الله السورة {يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء تلقون اليهم بالمودة} الى قوله {فقد ضل سواء السبيل}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4274
- Book Index
- 308
Grades
- -
