ஹதீஸ்கள்
#3993
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அகபா' விசுவாசப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவரான ராஃபிஉ (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான தம்முடைய மகன் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம், “ அகபா வாக்குப் பிரமாணத்திற்குப் பிரதியாக பத்ரில் நான் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்குமா?” என்று கேட்பது வழக்கம். “ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (பத்ர் போரில் கலந்து கொண்டவர்களைப் பற்றி முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்கள்” என்றும் ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن يحيى، عن معاذ بن رفاعة بن رافع،، وكان، رفاعة من اهل بدر، وكان رافع من اهل العقبة، فكان يقول لابنه ما يسرني اني شهدت بدرا بالعقبة قال سال جبريل النبي صلى الله عليه وسلم. بهذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3993
- Book Index
- 44
Grades
- -
