ஹதீஸ்கள்
#3465
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்துக் கொண்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம்மை (நமது) வாய்மையான செயல்தான் காப்பாற்ற முடியும். ஆகவே, நம்மில் ஒவ்வொருவரும், தாம் எந்த விஷயத்தில் வாய்மையாக நடந்துகொண்டதாக நம்புகிறாரோ அதைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஆகவே, அவர்களில் ஒருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்: ‘‘இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு யிஃபரக்’ (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக்கொள்ளாமல்) விட்டு விட்டுச் சென்றுவிட்டார். நான் அந்த யிஃபரக்’ அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒருநாள்) அவர் என்னிடம் தமது கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம், ‘‘அங்கு சென்று, அந்த மாடுகளை ஓட்டிச்செல்” என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களிடம் எனக்குரியது ஒரு யிஃபரக்’ அளவு நெல்தானே!” என்று கேட்டார். நான் அவரிடம், ‘‘அந்த மாடுகளை எடுத்துக்கொள். ஏனெனில் அவை (நீ விட்டுச்சென்ற) அந்த ஒரு யிஃபரக்’ நெல்லிலிருந்து கிடைத்தவைதான்” என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்.) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களை விட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக!” அந்தப் பாறை அவர்களைவிட்டு சற்றே விலகியது. மற்றொருவர் பின்வருமாறு பிரார்த் தித்தார்: ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாகிவிட்டது. அவர்கள் தூங்கிய பின்பு சென்றேன். என் மனைவி யும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக்கொண்டிருந்தனர். என் தாய் தந்தையர் பருகுகின்ற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்) விட்டுவிட, அவர்கள் (எழுந்தவுடன்) அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. ஆகவே, அதிகாலை நேரம் உதயமாகும்வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால்தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!” அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (இன்னும் சற்று) விலகியது. மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: ‘‘இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமான வளாக இருந்தாள். நான் அவளை எனக்கு யிஇணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டுவந்தால் தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள். நான் அவளிடம் (உடலுறவுக்காக) அமர்ந்தபொழுது அவள், ‘‘அல்லாஹ்வை அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப் பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே” என்று சொன் னாள். உடனே நான் (உடலுறவு கொள் ளாமல்) எழுந்துவிட்டேன். நூறு தீனார் களை (அவளிடமே) விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்கு வாயாக!” எனவே, அவர்களைவிட்டு அல்லாஹ் (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3465
- Book Index
- 132
Grades
- -