ஹதீஸ்கள்
#3459
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதற்குமுன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்)காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள் தவணை, அஸ்ருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்), ‘‘எனக்காக நடுப்பகல் நேரம்வரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு யிகீராத்’துக்காக நடுப்பகல்வரை வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘‘நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். கிறித்த வர்கள் நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’துக்காக வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘‘அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டி ரண்டு யிகீராத்’துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். தெரிந்துகொள்ளுங்கள்: அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு யிகீராத்’துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான். தெரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குத்தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது. இதைக் கண்ட யூதர்களும் கிறித்தவர்களும் கோபமடைந்து, ‘‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், ‘‘நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்)திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், ‘‘அ(ப்படிச் சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும். அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.132 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال " انما اجلكم في اجل من خلا من الامم ما بين صلاة العصر الى مغرب الشمس، وانما مثلكم ومثل اليهود والنصارى كرجل استعمل عمالا فقال من يعمل لي الى نصف النهار على قيراط قيراط فعملت اليهود الى نصف النهار على قيراط قيراط، ثم قال من يعمل لي من نصف النهار الى صلاة العصر على قيراط قيراط فعملت النصارى من نصف النهار الى صلاة العصر، على قيراط قيراط، ثم قال من يعمل لي من صلاة العصر الى مغرب الشمس على قيراطين قيراطين الا فانتم الذين يعملون من صلاة العصر الى مغرب الشمس على قيراطين قيراطين، الا لكم الاجر مرتين، فغضبت اليهود والنصارى، فقالوا نحن اكثر عملا واقل عطاء، قال الله هل ظلمتكم من حقكم شييا قالوا لا. قال فانه فضلي اعطيه من شيت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3459
- Book Index
- 126
Grades
- -
