ஹதீஸ்கள்
#3447
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப் பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும் விருத்த சேதனம் செய்யப் படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறினார்கள். பிறகு ‘‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படு வதைப்போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” (21:104) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப் பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப் பக்கமும் கொண்டுசெல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். ‘‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்துவந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிக்கொண்டபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக்கொண்டிருக்கின்றாய். நீ அவர் களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடியார்களே! (அதற்கும் உனக்கு முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்து விட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவாய்” (5:117,118) என்று சொல்வேன். கபீஸா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் மதம் மாறியவர்கள்தான்! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن المغيرة بن النعمان، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " تحشرون حفاة عراة غرلا، ثم قرا {كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} فاول من يكسى ابراهيم، ثم يوخذ برجال من اصحابي ذات اليمين وذات الشمال فاقول اصحابي فيقال انهم لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم، فاقول كما قال العبد الصالح عيسى ابن مريم {وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت انت الرقيب عليهم وانت على كل شىء شهيد} الى قوله {العزيز الحكيم}". قال محمد بن يوسف ذكر عن ابي عبد الله عن قبيصة قال هم المرتدون الذين ارتدوا على عهد ابي بكر، فقاتلهم ابو بكر رضى الله عنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3447
- Book Index
- 117
Grades
- -
